India
13 வயது மல்யுத்த வீராங்கனை எடுத்த விபரீத முடிவால் கதறும் குடும்பத்தினர் : போலீசார் தீவிர விசாரணை !
கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே என்ற பகுதி உள்ளது. இங்கு ஹரிஹரா என்ற நகரில் காவ்யா பூஜார் என்ற 13 வயது சிறுமி தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் அவர் வீட்டின் பகுதியை அடுத்து சிறிது தூரத்தில் இருந்து காரடி மானே (Garadi Mane) என்ற பயிற்சி மையத்தில் மல்யுத்த பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் இந்த சிறுமி, விடுமுறை நாளில் மட்டுமே தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வீட்டுக்கு சென்ற சிறுமி, அவரது பெற்றோரிடம் கூட சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. பெற்றோரும் இதுகுறித்து கேட்டபோது சிறுமி எதையும் கூறாமல் தனது அறைக்குள்ளேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சிறுமி, தனியாக இருந்த நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி கிடந்துள்ளார்.
இதனை கண்டதும் பெரும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி தற்கொலை குறித்த கடிதமும் கிடைக்கவில்லை. மாறாக சிறுமியின் இந்த விபரீத முடிவுக்கு காரணம், பழுசுமையாக இருக்குமா அல்லது அவரது பயிற்சி மையத்தில் யாரேனும் அவருக்கு தொல்லை கொடுத்தனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இந்த சிறுமி மாவாட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுக்கும் அமைச்சர்கள்!
-
முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் இல்லாமல் ஏறினால் இனி நடவடிக்கை - தெற்கு ரயில்வே உத்தரவு !
-
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!