India
கோவிலுக்கு சென்று பிரசாதம் வாங்கிய இஸ்லாமிய இளைஞர்.. அடித்துக் கொலைசெய்த கும்பல்.. டெல்லியில் அதிர்ச்சி !
வடகிழக்கு டெல்லியின் சுந்தர் நாக்ரி பகுதியில் முகமது இஸ்ரார் (26) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதனை கவனித்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், அங்கு சென்று பிரசாதத்தை வாங்கியுள்ளார். அப்போது அதனைக் கண்ட அங்கிருந்த கும்பல் அந்த இளைஞரை பிடித்து யார் என்பது குறித்து விசாரித்துள்ளது. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் பதிலளிக்க முடியாமல் இருந்துள்ளது.
இதனால் அவர் மீது சந்தேகமடைந்த அந்த கும்பல், அந்த இளைஞரை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பலமணி நேரம் அந்த கும்பல் அந்த இளைஞரை தாக்கியும் அங்கிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன்வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கும்பலின் செயலால் படுகாயமடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றநிலையில், அங்கி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் வந்து அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே அந்த கும்பல் அந்த இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வீடியோ கட்சிகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் 20 வயதை கூட எட்டாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டை சுற்றி துணை ராணுவ பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !