India
மக்களுக்கு பாதுகாப்பில்லாத உ.பி : பா.ஜ.க ஆட்சியில் கடந்த 15 நாட்களில் நடந்த கொடூரங்கள்!
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் முதலமைச்சராக பதவிக்கு வந்ததிலிருந்தே இம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
மேலும் இந்துத்துவ கும்பல்களின் அராஜகமும் அதிகரித்துள்ளது. ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் பட்டியலினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில்தான் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைத்து பா.ஜ.க அரசு நாடகமாடி வருகிறது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஐந்துக்கு மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளது பா.ஜ.க அரசின் நாடகத்தை நாட்டிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி நகரில் ஒரே நாளில் மூன்று படுகொலைகள் நடந்துள்ளது. அதேபோல் அவுரையா, அம்பேத்கர் நகர், ஆசம்கர் ஆகிய பகுதிகளில் இரட்டை படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
மேலும், பிரயாக்ராஜ் பகுதியில் பள்ளி மாணவன் கடத்தப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டுள்ளது. பின்னர் பள்ளிச் சிறுவனை அந்த கும்பல் படுகொலை செய்துள்ளது. அதேபோல், சுல்தான்பூரில் மருத்துவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக பா.ஜ.க. நிர்வாகியின் உறவினர் உள்ளார். அம்பேத்கர் நகரில்கனவரின் முன்பே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல். இதனால் மனம் உடைந்து தம்பதி விஷம் அருந்தி தற்கொலை.
இந்த கொடூர சம்பவங்கள் கடந்த இரண்டு வாரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் தான் இந்தியாவின் பாதுகாவலர்கள் என சொல்லி வரும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில்தான் இப்படியான கொடூரங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!