India
மனைவியை கொன்று 36 மணிநேரம் பாத்ரூமில் ஒளிந்துகிடந்த கணவர்.. வெளிவந்த கொலைக்கான அதிர்ச்சி பின்னணி !
உத்தரப்பிரதேசமாநிலமத்தை சேர்ந்தவர் நிதின் சின்ஹா. இவருக்கும் வழக்கறிஞரான ரேணு சின்ஹா (61) என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. சமீப காலமாக ரேணு சின்ஹாவுக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்பதில் இருவருக்கும் இடையே சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில், ரேணு சின்ஹாவின் சகோதரர் காவல்துறைக்கு போன் செய்து ரேணு சின்ஹாவை இரண்டு நாட்களான தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக ரேணு சின்ஹாவின் வீட்டுக்கு போலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்ததும் வீட்டின் குளியலறையில் ரேணு சின்ஹா உயிரிழந்து கிடப்பதை கண்டு போலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரேணு சின்ஹாவின் கணவர் காணாமல் போனதால் அவர் மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது.
உடனடியாக அவரின் மொபைல் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலிஸார் தெரிந்துகொள்ள முயன்றபோது அது அவர் தனது வீட்டின் பின்புறம் இருப்பதாக காட்டியது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலிஸார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு இருந்த பாத்ரூமில் அவர் ஒளிந்துகொண்டிருப்பதை போலிஸார் கண்டு பிடித்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனைவியை கொலைசெய்துவிட்டு சுமார் 36 மணி நேரமாக பாத்ரூமில் ஒளிந்துகொண்டிருந்தாக கூறியுள்ளார். மேலும், ரேணு சின்ஹாவின் சொத்தை விற்க அவர் ஒப்புக்கொள்ளாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!