India
ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்திற்குட்பட்ட யாபால் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமுலு. இவர் ஆட்டுப்பன்னை வைத்துள்ளார். இவரது ஆட்டுப்பனையிலிருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்டுப் பண்ணையில் வேலைபார்த்து வரும் நரேஷ் என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த கிரண் அவரது நண்பர் தேஜா ஆகியோர் தான் ஆடுகளை திருடி இருப்பார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளார்.
இதனால் ஆட்டுப்பனை உரிமையாளர் ராமுலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் ஸ்ரீனிவாஸ் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு கிரண், தேஜா ஆகிய இருவரையும் பிடித்து பன்னையில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். மேலும் தரையில் புகைப்போட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமுலு, ஸ்வரூபா, ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!