India

மக்களின் வீடுகளை இடித்த பா.ஜ.க அரசு.. பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்: அசாமில் அவலம்!

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளார். பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குவஹாத்தி நகரத்தில் உள்ள சில்சாகோ பீல் எரி அருகே உள்ள குடியிருப்புகளை பா.ஜ.க அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இதற்கு அங்குக் குடியிருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்து போலிஸார் பெண்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள், "இந்த நிலத்தைப் பணக்காரர்களுக்குக் கோடிக்கணக்கில் விற்றுவிடலாம் என நினைத்து எங்களை பா.ஜ.க அரசு தூக்கி எறிந்துவிட்டது. இனி நாங்கள் எங்கே போவது? எங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது" என வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தலைவர் லூரின்ஜோதி கோகோய், "பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற போராட்டத்தால் நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். முதன்முறையாக எங்கள் மாநிலத்தில் பெண்கள் அடைகளைக் கழற்றி போராட்டம் நடத்தும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் கோடிக்கணக்கான பணம் யாருடையது?... மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல்!