India
நடுரோட்டில் அமேசான் மேலாளர் சுட்டுக்கொலை.. டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டெல்லி பஜன்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிரீத் கில். இவர் அமேசான் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் சுபாஷ் விஹார் பகுதிக்கு வந்த போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் ஹர்பிரீத் கில் மற்றும் அவரது மாமா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஹர்பிரீத் கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவரது மாமா படுகாயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் படுகாயத்துடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Also Read
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!