India
“சாப்பாடு கம்மியா கொடு..” தாயிடம் அடம்பிடித்த 3 வயது குழந்தை.. விசாரிக்கையில் காத்திருந்த அதிர்ச்சி !
டெல்லி ஹவுஸ் காஸ் என்ற பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 3 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இந்த சூழலில் சிறுமிக்கு அவரது தாயார், வழக்கமாக உணவு கொடுத்து அனுப்புவார். அந்த வகையில் சிறுமிக்கு உணவு வைக்கும்போது, சிறுமி தனக்கு சாப்பாடு குறைவாக கொடுக்கும்படி கூறியுள்ளார்.
முதலில் சிறுமி சாப்பிட சோம்பேறித்தனம் செய்து கூறுவதாக எண்ணிய தாயோ, அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து சிறுமி தனக்கு குறைவான சாப்பாடு கொடுத்து அனுப்புமாறு கூறி அடம்பிடித்துள்ளார். மேலும் காரணத்தை கேட்டபோது, அப்போதுதான் தான் அடிக்கடி பாத்ரூம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
சிறுமியின் பதில் மிகவும் வினோதமாக பதிலை கேட்டு குழம்பிய தாயோ, அவரிடம் விடாமல் கேட்டுள்ளார். அப்போது சிறுமி தன்னை தனது பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் தொந்தரவு கொடுப்பதாக கூறினார். மழலை பேச்சில் சிறுமி தனக்கு நேர்ந்ததை கூற, அதிர்ந்து போன தாயோ உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமியிடம் அர்ஜுன் என்ற நபர் அவதூறாக நடந்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து தூய்மை பணியாளர் அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது சிறுமி தன்னை அந்த நபர் ஆபாசமாக தொட்டது குறித்து தெரிவித்தார்.
தொடர்ந்து அர்ஜுன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அர்ஜுனை கைது செய்தனர். கழிவறைக்கு செல்லும்போதெல்லாம் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தூய்மை பணியாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!