India
என்னால் முடிந்தது என்றால் ஏன் மணிப்பூர் முதல்வரால் முடியாது?: கேள்வி எழுப்பும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர்!
மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. 83 நாட்களாகியும் இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை.
மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில், வன்முறை தொடங்கிய அடுத்த நாளான மே 4ம் தேதி மாநிலம் முழுவதும் குக்கி இன பெண்களுக்குப் பல கொடூரங்கள் நடந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதே நாளில் இம்பாலில் 2 பழங்குடியின இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் மணிப்பூர் கொடூரம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து வருகிறது. மோடி அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்களை மணிப்பூர் முதலமைச்சர் இதுவரை நேரில் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க முதலமைச்சர் பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. டெல்லியிலிருந்து வந்து என்னாலேயே சந்திக்க முடிந்தது. ஏன் முதலமைச்சரால் சந்திக்க முடியவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!