India
இளைஞரை தாக்கிய சிறுத்தை.. இறுதியில் சிறுத்தைக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம் !
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகரே என்ற பகுதியை அடுத்துள்ளது பாகி பாலு என்ற கிராமம். இந்த கிராமத்தில் பல்வேறு மக்களும் வசித்து வரும் நிலையில், வேணுகோபால் (எ)முத்து என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வசித்துவ வருகிறார். விவசாய தொழில் செய்த்து வரும் இவர், தினமும் தான் வேலைக்கு செல்லும் இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.
அந்த வகையில் சம்பவத்தன்று காலை வேணுகோபால் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னுடைய தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது இவர் வருவதை கண்ட அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்க முயன்றது. இதனால் அவர் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை சிறுத்தை கடுமையாக தாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சிறுத்தையை எதிர்த்து போராடினார். தொடர்ந்து போராடிய அந்த இளைஞர் இறுதியாக சிறுத்தையை அடக்கி, அதன் கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு தனது பைக்கில் உடம்பையும் சேர்த்து வைத்து கட்டிப்போட்டார். பின்னர் கட்டிப்போட்ட அந்த சிறுத்தையை தனது பைக்கிலேயே ஊருக்குள் கொண்டு வந்தார்.
இளைஞர் சிறுத்தையை கட்டிப்போட்டு கொண்டு வந்ததை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞருடன் சேர்ந்து சில பேர், அந்த சிறுத்தையை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டனர். தற்போது அந்த சிறுத்தை வனத்துறை கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருகிறது.
அதே சமயத்தில் சிறுத்தை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இளைஞரும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கிய சிறுத்தையின் கை, கால்களை கட்டி போட்டு ஊருக்குள் கொண்டு வந்த இளைஞரின் செயல் தற்போது கர்நாடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!