India
இறந்த பெண்ணின் சடலத்துக்கு நேர்ந்த கொடுமை.. அதிக சக்தி கிடைக்கும் என மோசமான செயலை செய்த இருவர் கைது !
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடா என்றார் பகுதியைச் சேர்ந்த மதுஸ்மிதா என்ற இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். அதன்பின்னர் அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்துக்கு இறுதி மரியாதைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்ததும், எரியூட்ட தகன மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர் கிராம மக்கள் சூழ அந்த இளம்பெண்ணின் சடலம் எரிவூட்டப்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த இருவர் திடீரென எரிந்துகொண்டிருந்த அந்த பெண்ணின் சடலத்தை பிய்த்து, அதை மூன்று பங்காகப் பிரித்து, இரண்டு பங்குகளை மீண்டும் தீயிலேயே வீசிவிட்டு, ஒரு பாகத்தை இருவரும் உண்டுள்ளனர்.
இந்த செயலால் அதிர்ந்த அங்கிருந்த கிராமத்தினர் அவர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பெயர் சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) என்பது தெரியவந்தது.
மேலும், இருவரில் சுந்தர் மோகன் சிங் சூனியம் செய்பவர் என்றும், திருமணமாகாத ஒரு பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் அதிக சக்தி கிடைக்கும் என கருத்தியதால் இதனை செய்தோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாடு குறள் நாடு” - குறள் பரப்பும் முதலமைச்சர் ஆசான் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!