India
பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகிக்கு முழு ஆதரவு.. பிராமின் சமாஜின் அறிவிப்பால் அதிர்ச்சி!
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழங்குடியினர் மீது பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பா.ஜ.கவைச் சேர்ந்த கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகரின் இந்த கொடூரச் செயலுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பா.ஜ.க அரசு பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், அவரின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதையும் இடித்துத் தள்ளியது.
இந்த நிலையில், சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவுக்கு ஆதரவாக அகில இந்திய பிராமின் சமாஜ் களமிறங்கியுள்ளது. பழங்குடியினரான தஷ்மத் ராவத்தின் முகத்தில் சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீட்டை இடித்த மாநில அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய பிராமண சமாஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தவிர குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவ பிராமின் சமாஜ் சார்பில் 51,000 ரூபாய் நிதி திரட்டி அவரின் சட்டரீதியிலான நடவடிக்கைக்கு உதவும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய பிராமின் சமாஜ் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், பிரவேஷ் சுக்லாவின் வீட்டின் மீதான அரசின் புல்டோசர் நடவடிக்கையை எதிர்த்து ஜபல்பூர் உயர்நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்றும் அவரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?