India
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லச் சொல்லி இஸ்லாமிய இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளிகள்.. 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை !
ஜார்கண்டில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடக்கோரி இஸ்லாமிய இளைஞரை அடித்துக்கொன்ற குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தாட்கிடி கிராமத்தில் பைக் திருடியதாகக் கூறி கம்பத்தில் கட்டி வைத்து தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை 7 மணி நேரமாக சிலர் கொடூரமாகத் தாக்கினர். பெயரைக் கேட்டபின் ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமான் என கோஷமிடக் கூறிய நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து போலீசாரால் மீட்கப்பட்ட தப்ரேஸ், 4 நாட்களிலேயே சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேதப்பரிசோதனை முடிவில் மாரடைப்பு என முடிவுகள் வெளியான நிலையில், இதனை எதிர்த்து தப்ரேஸின் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று செராய்கேலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 4 ஆண்டுகளுக்குப்பின் இவ்வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!