India
முதலிரவில் ஏற்பட்ட வயிறு வலி.. மறுநாளே பிறந்த குழந்தை.. மணப்பெண்ணால் அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை !
கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சேர்ந்த இளம்பெண் ஒருவரது குடும்பம் அறிமுகமாகியுள்ளது. எனவே மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணை பார்த்து பிடித்துப்போகவே திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
அதன்படி கடந்த ஜூன் 26-ம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணப்பெண் - மாப்பிள்ளை ஆகியோர் தங்களது அறையில் இருக்கவே, அந்த சமயத்தில் திடீரென வயிறு வலிப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஆரம்பத்தில் வீட்டில் சில வைத்தியங்கள் பார்த்துள்ளனர். எனினும் அது பலனளிக்காமல் வயிறு கடுமையாக வலித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அப்பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மறுநாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
இதையடுத்து புதுமணப் பெண்ணுக்கு திருமணமாகி மறுநாளே குழந்தை பிறந்துள்ள சம்பவம் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது இருவீட்டாரின் இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த பெண் முன்பே கர்ப்பமானதை தெரிந்துகொண்டே, தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக மாப்பிள்ளை வீட்டார் குற்றம்சாட்டினர்.
அதுமட்டுமின்றி திருமணத்துக்கு முன்னரே, பெண் வயிறு வீங்கி போய் இருப்பதற்கான காரணத்தை கேட்ட மாப்பிள்ளை வீட்டாரிடம், தங்களது பெண்ணுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதனால் வயிறு பெருத்து காணப்படுவதாகவும் பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை ஏற்க முடியாது என மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணையும், பிறந்த குழந்தையையும் பெண் வீட்டார் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து போலீசிலும் இரு தரப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. திருமணம் முடிந்த மறுநாளே புதுமணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!