India
ஒரே பகுதியில் 2-வது முறை.. 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. பொதுமக்கள் ஆவேசம் !
கேரளா மாநிலம் கண்ணூரை அடுத்துள்ளது முழபிலாங்காடு என்ற பகுதி. இங்கு பாச்சாக்கரை எல்பி பள்ளியில் சிறுவர் சிறுமியர்கள் பலரும் படித்து வருகின்றனர். அந்த வகையில் ஜான்விக் என்ற 9 வயது சிறுமி அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் சிறுமி தனியாக வீட்டின் அருகே நின்றுள்ளார். அப்போது அங்கே இருந்த சில தெருநாய்கள் சிறுமியை துரதியுள்ளது.
இதில் பயந்துபோன சிறுமி அங்கிருந்து ஓடுகையில் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த நாய்கள் சிறுமியின் மேல் பாய்ந்து கடித்து குதறியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நாய்களை விரட்டி சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமியின் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே கண்ணூர் முழப்பிலங்காட்டை சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற 11 வயது பேச்சுத் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுவன் அங்கிருந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிபிடத்தக்கது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!