India
பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதிய பேருந்து.. மனதை நடுங்க வைக்கும் திக் திக் CCTV காட்சி!
புதுச்சேரி நகரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் 1 முதல் 5ம் வகுப்பை வரை சில படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ புஸ்ஸி வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் எதிரே வந்த பேருந்து ஒன்று ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பள்ளி சிறுமிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் இரண்டு சிறுமிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான நெஞ்சைப் பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து மீது ஆட்டோ வேகமாக மோதுவதும், பின்னர் ஆட்டோவில் இருந்து சிறுமிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறுவதும், அவர்களை அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!