India
சாதி காரணமாக காதல் ஜோடியை சுட்டுக்கொலை செய்த பெண்ணின் தந்தை.. சடலத்தை முதலைகளுக்கு உணவாக்கிய கொடூரம் !
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (வயது 18). இவரும் பக்கத்து கிராமத்தை சேந்த ராதேஷியாம் தோமருக்கும் (வயது 21) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இவ்ர்கள் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே சிறிது நாட்களாக ராதேஷியாம் காணாமல் போயுள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் அவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது போலிஸார் நடத்திய விசாரணையில் ராதேஷியாம் காதலித்த ஷிவானியும் காணாமல் போனது தெரியவந்தது.
தொடர்ந்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் மற்றும் அவர் காதலித்த ராதேஷியாமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும், அவர்களின் உடலை கனமான கற்களை கட்டி, சம்பல் ஆற்றில் போட்டுவிட்ட கொடூர செயலையும் பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலிஸார் அவர்கள் சொன்ன இடத்தில் இளம் ஜோடிகளின் சடலத்தை தீவிரமாக தேடிவருகின்றனர். சாம்பல் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில், இளம் ஜோடிகளின் சடலத்தை அவைகள் தின்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. சாதி, கவுரவம் எனக் கூறி, பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !