India
நடுரோட்டில் 16 வயது சிறுமியை குத்திக் கொலை செய்த 20 வயது வாலிபர்.. டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டெல்லி ஷஹாபாத் ஜே.ஜே காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சாஹால் என்ற வாலிபர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுமியைப் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார்.
பின்னர் சிறுமி கத்திகுத்துபட்டு அப்படியே சாலையில் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் அருகே இருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இந்த கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமையைக் கொலை செய்தது சாஹால் என்பது தெரியவந்தது.
பின்னர் தலைமறைவாக இருந்த சாஹால் குறித்து போலிஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அவர் உத்தரப் பிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது. பிறகு அங்குச் சென்ற போலிஸார் தலைமறைவாக இருந்த சாஹாலை கைது செய்தனர்.
இதையடுத்து ஏன் சிறுமியை அவர் கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் 16 வயது சிறுமி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!