India

பூங்காவில் விளையாடி கொண்டிருந்த கூலி தொழிலாளியின் மகன்.. கடித்து குதறிய தெருநாய்: இறுதியில் நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் அருகே அமைந்துள்ளது காசிபேட் என்ற பகுதி. இங்கு இருக்கும் இரயில்வே காலனி பகுதியில் உத்தர பிரதேசம், வாரணாசியை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. சாலையோரங்களில் சிறு, சிறு பொருட்களை விற்கும் கூலி தொழிலாளியான அந்த தம்பதிக்கு 7 வயதில் சோட்டு என்ற மகன் உள்ளார்.

இந்த சிறுவன், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுவன் சோட்டு அங்கிருக்கும் பூங்காவில் தினமும் விளையாடி வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்றும் சிறுவன் சோட்டு, அதே பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.

அந்த சமயத்தில் சிறுவன் ஓடி விளையாடியதை கண்ட அந்த நாய், உடனே சிறுவனை துரத்த தொடங்கியுள்ளது. இதில் சிறுவன் கத்திகொண்டே ஓட, கீழே விழுந்துள்ளார். அப்போது சிறுவன் மீது பாய்ந்த அந்த நாய் அவரை கடித்து குதறியுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் நாயை துரத்தி சிறுவனை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நாய் கடித்து குதறியதில் இரத்த கோரங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அந்த நாய் சிறுவனனின் கழுத்தில் பயங்கரமாக கடிதத்தால் சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வாரங்கல் மேற்கு எம்.எல்.ஏ. தசயம் வினய் பாஸ்கர், நகர மேயர் பிரகாஷ்ராவ் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் இழப்பீடும் வழங்கினார். அண்மைகாலமாகவே தெருநாய்கள் சிறுவர்களை கடித்து துன்புறுத்தி வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதற்காக பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Insta-வில் வந்த லிங்க்.. கிளிக் செய்த புதுவை இராணுவ வீரர்.. கோடி கணக்கில் பணம் இருப்பதாக காட்டி மோசடி !