India
முதல்முறை பூப்பெய்திய சிறுமி.. மாதவிடாய் ரத்தக்கறையை கண்டு கோவத்தில் தங்கையை கொலைசெய்த கொடூர அண்ணன் !
மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித். இவரின் வீட்டில் இவரின் மனைவியோடு ஸ்மித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்துள்ளார். இதில் வழக்கம்போல சுமித்தின் சகோதரி விளையாடிக்கொண்டிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அவரின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனைப் பார்த்த சுமித்ஆடையில் எப்படி ரத்தம் வந்தது என தனது சகோதரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த சிறுமியால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவர் சகோதரரிடம் உரிய காரணத்தால் கூறாமல் இருந்துள்ளது.
சகோதரியின் இந்த நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த சுமித் தனது சகோதரி யாரோ ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார் என்றும், அதனால்தான் அவரின் உடையில் ரத்தகரை இருப்பதாகவும் சந்தேகம் அடைந்து தனது சகோதரியை அடித்து தாக்கியுள்ளார்.
மேலும், சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்துள்ளார். இதில் வலியில் முனங்கிய சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் சுமித்திடம் இருந்து சிறுமியை மீட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சிறுமி பூப்பெய்தியதால் அவருக்கு முதல்முறை மாதவிடாய் வந்ததும் இதனை சிறுமியால் சகோதரரிடம் புரியவைக்காத நிலையில்,சந்தேகம் அடைந்து சகோதரர் சிறுமியை அடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் அவரின் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா என போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !