India
தொடரும் சோகம்.. தீவிரமாக கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவன்.. சுருண்டு விழுந்து உயிரிழப்பு !
மகாராஷ்டிரா மாநிலம் வன்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் மகாதேவி சிவாஜி தமன்கோங்கர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வேதாந்த் தமன்கோங்கர் என்ற 14 வயதில் மகன் உள்ளார். இவர் அந்த பகுதி பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தற்போது பள்ளி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இல்லாமல், வெளியில் நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறுவன் வேதாந்தும் தனது வீட்டின் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நண்பர்களிடம் கூறியவாறே கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன நண்பர்கள் உடனே வேதாந்தின் பெற்றோரிடம் கூறினர்.
இதனை கேட்டு பதறிப்போன பெற்றோர் விரைந்து வந்து மகனை மீட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் மயக்கமடைந்ததால் பெற்றோர் மேலும் பதறி போனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கும் அனுப்பினர். உடற்கூறாய்வு முடிவு படி சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போல் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மட்டுமே குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போதே 45 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !