India

ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவி - விபரீத முடிவுக்கு என்ன காரணம்?: பாஜக ஆளும் மாநிலத்தில் பயங்கரம்!

கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் ஹுவினா ஹடகாலி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா (20). இவர் ஹடகாலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்கிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரிக்கும் விடுதிக்கும் சில கிலோமீட்டர் தூரம் இருப்பதால், விடுதியில் இருந்து அரசு பேருந்து மூலம் சென்று வந்துள்ளார். மேலும் அவர் படிக்கும் கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் இல்லாததால் சற்று தூரம் நடத்துச் சென்று பேருந்தில் இறங்கவோ, ஏறவோ முடியும் சூழல் இருந்திருக்கிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் ஸ்வேதா கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது கல்லூரிக்கு தாமதமானதாக கூறப்படுகிறது. அதனால் கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தக்கோரி நடத்துடனரிடம் கோரிக்கை வைத்துள்ளார் மாணவி ஸ்வேதா. ஆனால் மாணவியின் கோரிக்கைக்கு நடத்துனர் சேவிசாய்க்காததால், ஓடும் பேருந்தில் இருந்து மாணவி கீழே குதித்துள்ளார்.

முன்னதாக நடத்துனர், மாணவியிடன் கல்லூரிக்கு தாமதமானால் பேருந்தில் இருந்து கீழே குதித்து இறங்கிக்கொள் என்ற கோவமாக பேசியதால், ஆத்திரத்திலும் விரத்தியிலும் ஸ்வேதா வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று குதித்துள்ளதாக பேருந்தில் பணித்த சக மாணவிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து பேருந்தில் இருந்து குதித்தால் தலையில் பலத்தக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்துள்ளார் மாணவி ஸ்வேதா. இதனையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாணவியின் மரணத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததேக் காரணம் எனவும், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பா.ஜ.க அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பவே, மாணவர்களைச் சமாதானப்படுத்தி பேருந்து நிறுத்தத்துக்கு வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னையில் இந்தியா- பாகிஸ்தான் மோதல்.. உலகக்கோப்பை தொடர் குறித்து வெளிவந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் !