India

மோடி ஆட்சியில் மகிழ்ச்சியை இழந்த மக்கள்: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 126வது இடத்தில் இந்தியா!

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு UNSDSN என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக, 2022ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை நடத்தியது. மேலும், ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை எப்படி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

149 நாடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது. சமூக ஆதரவு, வருவாய், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய 6 முக்கிய காரணிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை UNSDSN வெளியிட்டது. அதன்படி, பின்லாந்து நாட்டு மக்கள்தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

இந்த ஆய்வு முடிவில் இந்தியா எத்தனையாவது இடம்பெற்றுள்ளது தெரியுமா? ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 149 நாடுகளில் இந்தியா 126வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி, இந்திய மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 16வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சீனா 94வது இடத்தில் இருந்தநிலையில் வியக்கத்தக்க வகையில் 82வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. 149 நாடுகளில் இந்தியா 126-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 139 வது இடத்தில் இருந்தது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 108வது இடத்திலும், வங்கதேசம் 118வது இடத்திலும், இலங்கை 112வது இடத்திலும் முன்னேறியுள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா பின்தங்கியே உள்ளது.

Also Read: “தமிழ்நாட்டின் ரியல் ஹீரோ சி.எம் மு.க.ஸ்டாலின்தான்..” : விழா மேடையில் பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்!