India
காதலிக்க மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த திருநங்கை.. தெலங்கானாவில் அதிர்ச்சி !
தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்த சலூரி அஞ்சலி (வயது 21) என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரொடு பரமேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி இருக்கும் நிலையில், அவருக்கும் அஞ்சலிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
திருநங்கை மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்கள் மூவரும் இணைந்து ஒரே இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அந்த தருணத்தில் திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலி மேல் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னை காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாடும் திருநங்கை மகேஸ்வரி அஞ்சலியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், இதில் சற்றும் விரும்பம் இல்லாத அஞ்சலி திருநங்கை மகேஸ்வரியின் கோரிக்கையை தொடர்ந்து புறம்தள்ளி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று தன்னை காதலிக்குமாறு அஞ்சலி மற்றும் திருநங்கை மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எப்போதும்போல மகேஸ்வரியின் கோரிக்கையை அஞ்சலி மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த திருநங்கை மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அஞ்சலியை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் திருநங்கை மகேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !