India
செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குத் தெரிந்த ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு செல்போன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமி அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நண்பர் உட்பட 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பிறகு அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடித்து நடந்தவற்றை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமை ஊருக்கு வெளியே கொண்டு சென்று விட்டுள்ளனர். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி வன்கொடுமை செய்த நான்கு பேரையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!