India
சினிமாவில் வாய்ப்பு.. பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: சீரியல் நடிகை உடந்தை -கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் 24 வயது இளம்பெண் ஒருவர் சினிமா மீது ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இதனால் அவர் வாய்ப்பு தேடி அழைத்துள்ளார். அப்போது சீரியல் நடிகை ஒருவரது அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே அந்த பெண்ணிடம் தனக்கு வாய்ப்பு வாங்கி தரும்படி கூறியுள்ளார்.
அந்த பெண்ணும், தனது ஆண் நண்பர் ஒருவரை அறிமுகப்டுத்தியுள்ளார். தொடர்ந்து அவர்கள் சினிமா வாய்ப்புகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, நிச்சயம் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண்ணும் அவர் சொல்வதை கேட்டுள்ளார்.
அதன்படி சம்பவம் நடந்த அன்று, சினிமா குறித்து பேச வேண்டும் என்று அந்த நபர், இந்த பெண்ணை தனது பிளாட்டுக்கு அழைத்துள்ளார். மேலும் இவரை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகையும் இந்த பெண்ணை அங்கே போகும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே இவர்கள் இருவரையும் நம்பிய அந்த பெண்ணும், அவர் சொன்ன நேரத்துக்கு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, அந்த நபர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து சினிமா வாய்ப்பு கேட்டு சென்ற அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது புகார் கொடுக்க எண்ணியுள்ளார்.
அதன்படி அவர்கள் அனைவர் மீதும் அந்த பெண் புகார் கொடுத்தார். தொடர்ந்து தன்னை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர்கள் மீதும், தன்னை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை மீதும் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!