India
மருத்துவரின் அலட்சியம்.. சிறுமிக்கு பரவிய HIV நோய்: பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் சுகாதாரத்துறை மிக மோசனமான நிலையில் உள்ளது என்பதை கொரோனா காலம் அம்பலப்படுத்தியது. இதிலிருந்தும் பா.ஜ.க அரசு பாடல் கற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியத்துடனே சுகாதாரத்துறையைக் கையாண்டு வருகிறது என்பது அங்கிருந்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் தெரிவிக்கிறது.
இந்நிலையில் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் சிறுமிக்குப் பயன்படுத்தியதால் அவருக்கு எச்.ஐ.வி தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதே மாநிலம் எட்டா மாவட்டத்தில் ராணி அவந்தி பாய் லோதி என்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். இதில் சிறுமி ஒருவருக்கு எச்ஐவி தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அச்சிறுமியையும் அவரது பெற்றோரையும் மருத்துவமனையில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் எட்டா மாவட்ட நீதிபதியிடம் நடந்த சம்பவத்தை விலக்கி மனு ஒன்றை அளித்துள்ளனர். மருத்துவரின் அலட்சியத்தாலே தங்களது குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று பரவியது என கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், தவறு செய்த மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?