India
உ.பி அருகே தேஜஸ் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய ரயில்வே காவலர்: அதிரடியாக கைது செய்ய அதிகாரிகள்!
டெல்லியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு ராஜ்தானி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பாட்னாவுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்த ரயில் ஹத்ராஸ் ரயில் நிலயத்துக்கு அருகில் வந்ததும், அந்த பெண் ரயில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பார்த்த ரயில்வே காவலர் ஜிதேந்திரா என்பவர், அந்த பெண் கழிவறைக்கு வெளியே வரும் வரை காத்திருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த பெண் கழிவறையில் இருந்து வெளியே வந்ததும் காத்திருந்த ரயில்வே காவலர் ஜிதேந்திரா அந்தப் பெண்ணின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து மீண்டும் கழிவறைக்குள் இழுத்து முத்தமிட்டு தவறாக நடக்க முயற்ச்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி தனது இருக்கைக்கு சென்று தனது காதலரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் இருவரும் ரயில் கான்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த பின்னர் அங்கிருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே காவலர் ஜிதேந்திராவை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார். பின்னர் அவர் மீது கான்பூர் மத்திய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வெளிநாட்டு பெண் பயணிக்கு நடந்த இந்த பாலியல் அத்துமீறல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!