India
பாஜக உறுப்பினர்கள் என்னை கொலைசெய்யப்பார்த்தார்கள் -டெல்லி ஆம் ஆத்மி மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு !
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 50.48% வாக்குகள் பதிவாகிய நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மூன்று முனை போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வெற்றிபெற்று முதல் முறையாக டெல்லி மாநகராட்சியை தன்வசப்படுத்தியது. டெல்லிஒ மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்த பா.ஜ.க 104 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
மாநகராட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக தனது திள்ளுமுள்ளு அரசியலை வழக்கம் போல டெல்லியிலும் ஆடத்தொடங்கியது. அவையை பாஜக நடத்த விடாததன் காரணமாக 3 முறை மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெறாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாக ஒருவழியாக டெல்லி மேயர் தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின்னர் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் பாஜக மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டது. இதில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலின்போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாஜக கவுன்சிலர்கள் தாக்கியதாக மேயர் ஷெல்லி ஓபராய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலின்போதுதேர்தலின்போது சில பாஜக உறுப்பினர்கள் என்னை தாக்க வந்தனர். அவர்களால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் உயிரை காப்பாற்ற தப்பி ஓடினேன். அப்போது அவர்களிடமிருந்து என்னை பெண் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் காப்பாற்றினர். அவர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!