India
மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்.. வெளியான உண்மையால் அதிர்ச்சி.. குஜராத்தில் பரபரப்பு !
குஜராத் மாநில சூரத் பகுதியை சேர்ந்தவர் காஜல் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் (350 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் கதிர்காமம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளனர். கிஷோர் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கிஷோரின் குணம் மெல்ல மெல்ல மாறத்தொடங்கியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கிஷோர் தனது மனைவியுடன் கட்டயமாக பாலியல் உறவில் அடிக்கடி இருந்து வந்துள்ளார்.
அதோடு ஆபாச படங்களில் வருவது போல் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தி பலமுறை உறவு கொண்டுள்ளார்.
இதுபோன்ற செயல் காஜலுக்கு பிடிக்கவில்லை என்பதால், இதுகுறித்து அவரிடம் சண்டையிட்டுள்ளார். இருப்பினும் அதனை பெரிதாக பொருட்படுத்தாத கிஷோர், மீண்டும் மீண்டும் தனது மனைவியுடன் அத்துமீறி பாலியல் உறவு கொண்டுவந்துள்ளார். சம்பவத்தன்றும் அதே போல், கிஷோர் ஆபாச படங்கள் பார்க்கவே, காஜல் சண்டை போட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிஷோர், தனது மனைவி என்றும் பாராமல் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் தான் அவசரத்தில் இவ்வாறு செய்ததை உணர்ந்த கிஷோர், அவர் மீது எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து, மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கே தனது மனைவி தற்கொலை செய்துகொள்ள முயன்று தீக்குளித்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிகிச்சை பெற்று வந்த காஜலிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது காஜல், “ஆபாச வீடியோக்கள் உள்ளிட்ட பல காரணங்களால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவர் என்னிடம் விவாகரத்து கேட்டார், அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை அவர் உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்து விட்டார்" என்றார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி காஜல் உயிரிழந்தார். இதையடுத்து கிஷோர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆபாச வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட சண்டை காரணமாக கணவரே மனைவியை எரித்து கொலை செய்ததாக கூறப்படும் இந்த வழக்கு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
-
ரூ.18.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணைமின் நிலையம்... திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!