India
டெல்லியில் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கேன்சர் நோயாளி.. வெட்கக்கேடான செயலை செய்த விமான ஊழியர்கள் !
டெல்லியை சேர்ந்த மீனாக்ஷி சேன்குப்தா என்ற பெண்மணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. பின்னர் கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்கா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
அதன்படி விமான நிலையம் சென்ற அவர் தனது புற்றுநோய் குறித்த தகவலை கூறி விமானத்திற்குள் செல்வதற்காக வீல் சேர் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்ற விமான நிலைய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அவருக்கு வீல் சேர் ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் அமர்ந்த அவர் விமானத்துக்குள் சென்றுள்ளார். அங்கு சென்றபின்னர்தான் அவருக்கு பெரும் துயரம் நடந்துள்ளது. விமானத்துக்குள் இருந்த பணியாளர்கள் அவரின் கைப்பையை எடுத்து மேலே வைக்க கூறிய நிலையில், தனது நிலையை கூறி உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால், இது தனது வேலை அல்ல என்று அந்த விமான பணியாளர் அவரை அவமதித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக மீனாக்ஷி அங்கிருந்த மற்ற ஊழியர்களிடம் கூறிய நிலையில், அவர்களும் அந்த செயலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அசவுகரியமாக இருந்தால் விமானத்தை விட்டு இறங்கும்படி கூறியுள்ளனர். மேலும் விமான பணியாளர்கள் ஒன்றுகூடி மீனாக்ஷியை விமானத்தில் இருந்து இறங்குமாறு கூறி அவரை இறக்கிவிட்டுள்ளனர்.
தனக்கு நேர்ந்த இந்த அவலம் குறித்து மீனாக்ஷி விமான நிலைய ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு "அமெரிக்க ஏர்லைன்ஸ் ஊழியர்கள் செய்த செயல் அருவருப்பானது. வெட்கக்கேடானது "எனவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வழங்கும்படி அமெரிக்க ஏர்லைன்ஸுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் "டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸில் விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை கேட்காமல் இடையூறு விளைவித்ததற்காக விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.அவரது விமான கட்டணம் திருப்ப வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!