India

வருவாயை பெருக்க 4000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபகரமாக மாற இதுவே தீர்வு என Byju நிறுவனம் விளக்கம் !

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் அமேசான், கூகுள் நிறுவனங்களும் தங்கள் 5% பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டிலேயே இருந்த காரணத்தால் டிஜிட்டல் சேவையின் பயன்பாடு பெரிய அளவில் பெறுகியது.இதன் காரணமாக ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்தது. இந்த வருவாய் அப்படியே தொடரும் என கருதிய அந்த நிறுவனங்கள் அதிகப்படியாக ஊழியர்களை வேலைக்கு எடுத்தன.

ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், டிஜிட்டல் சேவையின் பயன்பாடும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அந்த நிறுவனங்களின் வருவாயில் இழப்பு என்பது மிகக்குறைவுதான் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இணைய கல்வி சேவை நிறுவனமான பைஜூ நிறுவனம் தனது பொறியாளர்கள் குழுவில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலையே இழக்கவுள்ளனர். இது குறித்து பேசியுள்ள பைஜூ நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன், "நிறுவனம் லாபகரமாக மாற ஊழியர்கள் பணிநீக்கம் ஒரு முக்கியமான செயல்" என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் பைஜூ நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணிகிராம் செய்தது. இதன்மூலம் சுமார் 2,500 பணியாளர்கள் வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணி நீக்கம் தொடர்பாக பைஜூ நிறுவனத்தின் ஊழியர்கள் கூறியபோது "கடந்த ஆண்டு அக்டோபரில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் குழுவில் 30 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு முன்னர் பொறியாளர் குழுவி 30 சதவீத ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்" எனக் கூறியுள்ளார்.

Also Read: "BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP மசோதா தாக்கல்!