India
'நீங்க எல்லோரும் மோசம்'.. 452 பேரை பணி நீக்கம் செய்த Wipro: END இல்லாமல் தொடரும் layoff!
உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.
ஐடி நிறுவனங்களில் மட்டும் இப்படி ஊழியர்கள் பணிநீக்கம் நடப்பது இல்ல. அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து வருகிறது. மேலும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது 452 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிப்பீட்டுச் செய்முறை என்பது நிறுவனத்தின் வணிக நோக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை போன்றவைகளுடன் ஊழியர்களைச் சீரமைப்பதற்கான மறுமதிப்பீடுகளை உள்ளடக்கியது.
ஊழியர்கள் தங்கள் பயிற்சிக்கும் பிறகும் மோசமாக செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த 452 ஊழியர்களை நாங்கள் பணி நீக்கம் செய்து உள்ளோம். பயிற்சிக்காக இவர்கள் செலுத்த வேண்டிய ரூ.75 ஆயிரம் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 452 பேரும் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவதால் ஐடி போன்ற மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தலை மீது பணி நீக்கம் என்ற கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது என்ற அச்சதிலேயே வேலைபார்த்து வருகின்றனர்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!