India
15 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற இளைஞன்.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
உத்தர பிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள சர்வயா பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா பிந்த். இவரது 15 வயது சகோதரி நிஷா. இவரைப் பயிற்சி நிறுவனம் ஒன்றிலிருந்து அனுராதா பிந்த் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரவிந்த் விஸ்வகர்மா என்ற இளைஞர் இருவரையும் தடுத்து வழிமறித்துள்ளார். பின்னர் திடீரென தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியை எடுத்து நிஷாவின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் சிறுமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை குறித்து நடத்திய விசாரணையில், சிறுமியை அரவிந்த் விஸ்வகர்மா காதலித்து வந்துள்ளார். தனது காதலைத் தெரிவித்தபோது சிறுமி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியைச் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்த் விஸ்வகர்மாவை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!