India
சாலையில் செல்லும்போது திடீரென பற்றி எரிந்த கார்.. பதறியடித்து ஓடிய மக்கள்: உயிர் தப்பிய 6 பேர்!
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட மூணாறு பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது.
இதையடுத்து பழுது சரி செய்து மீண்டும் ஆறு பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரில் இருந்த 6 பேரும் வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சிறிது நேரத்தில் அணைத்தனர்.
இருப்பினும் கார் தீயில் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!