India

பெண் பயிற்சியாளர் முன் TShirt கழட்டி அத்துமீறல்.. BJP அமைச்சர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த போலிஸ்!

இந்தியாவை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து பாலியல் வழக்கில் சிக்குவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பா.ஜ.க தலைவர்கள் தங்களது சொந்த கட்சியைச் சேர்ந்த பெண்களிடமே தவறாகக் நடந்து கொண்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுபற்றி எல்லாம் கவலைப் படாமல் பா.ஜ.க கட்சியின் தலைமை இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்கு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடகள பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் சண்டிகர் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்துக் கூறிய பாதிக்கப்பட்ட பெண் பயிற்சியாளர், "சந்தீப் சிங் என்னை முதலில் உடற்பயிற்சி கூடத்தில்தான் பார்த்தார். பிறகு எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினார். இதையடுத்து என்னை நேரில் சந்திக்க வரும் படி கூறினார்.

எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருந்ததால் அவரை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது அவர் எனது காலை தொட்டு அத்துமீறினார். மேலும் உன்னைப் பிடித்துள்ளது என கூறி அவர் டி ஷர்ட்டை கழட்டி என்னிடம் பாலியல்ரீதியாக நடந்து கொண்டார்" என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் சந்தீப் சிங் மறுத்துள்ளார். "எனது பெயரைக் கெடுக்கும் முயற்சி இது. என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். எனது விளையாட்டுத் துறையை முதல்வரிடமே ஒப்படைக்கிறேன்" என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Also Read: "உலகக் கோப்பைக்கு முன் இந்த முடிவை எடுக்காதீங்க".. விராட், ரோகித் சர்மாக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை!