விளையாட்டு

"உலகக் கோப்பைக்கு முன் இந்த முடிவை எடுக்காதீங்க".. விராட், ரோகித் சர்மாக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை!

உலகக் கோப்பைக்கு முன்பு ஓய்வு அறிவிக்க வேண்டாம் என விராட் கோலி, ரோகித் சர்மாக்கு முன்னாள் வீரர் கம்பீர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

"உலகக் கோப்பைக்கு முன் இந்த முடிவை எடுக்காதீங்க".. விராட், ரோகித் சர்மாக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளும் இந்த தொடருக்காக தயாராகி வருகிறது.

2011ம் ஆண்டில் தோனி வாங்கி கொடுத்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா போராடித் தோற்றது.

இதனால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என இந்திய வீரர்கள் முணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தொடர் இந்தியாவில் நடப்பதால் இது இந்திய அணிக்குச் சாதகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

"உலகக் கோப்பைக்கு முன் இந்த முடிவை எடுக்காதீங்க".. விராட், ரோகித் சர்மாக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை!

அதேநேரம் 2022ம் ஆண்டில் மட்டும் இந்திய அணிக்கு 7 பேர் கேப்டனாக தலைமை தாங்கியுள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு வலுவான தலைமை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேலும் மூத்த வீரர்களின் செயல்பாடும் மோசமாக இருந்து வருகிறது.

இதனால் உலகக் கோப்பை தொடருக்கு முன்பே ஒரு வலுவான அணியை உருவாக்குவதற்கான திட்டத்துடன் இளம் வீரர்களுக்கு அடுத்தடுத்து வரும் தொடர்களில் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

"உலகக் கோப்பைக்கு முன் இந்த முடிவை எடுக்காதீங்க".. விராட், ரோகித் சர்மாக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை!

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு வீராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் ஓய்வு என்ற பேச்சே இருக்கக் கூடாது என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கூறிய கவுதம் கம்பீர்," உலகக்கோப்பை வேண்டும் என்றால் விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வே எடுக்கக் கூடாது. அப்போதுதான் ஒரு நிலையான அட்டத்தை வெளிப்படுத்த முடியும். மாற்றங்களைச் செய்து கொண்டே இருந்தால் அது எடுபடாது. இதுதான் கடந்த 2 முறையும் நடந்தது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories