India

“வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்து ரூ.1870க்கு விற்பனை” - இதுதான் மோடி அரசின் புத்தாண்டு பரிசா?

வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது. இந்தநிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)" என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார்.

மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்.பி.ஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் வழக்கம்போல சொல்வது ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக ஆளும் பா.ஜ.க அரசு சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தியது. இதன்படி கடந்த மாதங்களைப் போலவே வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. அதேவேளையில், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, சென்னையில் ரூ.1917, கொல்கத்தாவில் ரூ.1870 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை பொருத்தவரை வர்த்தக சிலிண்டர்களின் விலை பல மாதங்கள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வந்தது.

Also Read: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்த வாராக்கடன்.. உண்மையை ஒப்புக்கொண்ட மோடி அரசின் லட்சணம் இதுதான்!