India
வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு!
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அடுத்த புங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங். வாலிபரான இவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று திருமணத்திற்காக உறவினர்கள் சுரேந்திர சிங் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, உறவினர்களுக்கு வீட்டில் சமையல் செய்யப்பட்டுள்ளது. அந்நேரம் திடீரென வீட்டின் ஸ்டோர் அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்துள்ளது.மேலும் தீ பற்றி எறிந்துள்ளது.
இந்த விபத்தில் ரத்தன் சிங், குஷ்பு என்ற இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 49 பேருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல்வர் அசோக் கெலாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக்குழுவிற்கு முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!