India
“கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?” : மோடிக்கு சரமாரி கேள்வி!
ரஷ்யா - உக்ரைன் போர் பிரச்னையை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக, ஐந்து மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலை அன்றாடம் உயர்த்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்கள் தலையில்தான் விழுகிறது.
ஒன்றிய அரசின் இதுபோன்ற அதிரடி முடிவு காரணமாக, வாகன போக்குவரத்து கட்டணமும் உயர்கிறது. எல்லா துறையிலும் மறைமுக விலைவாசி உயர்வு தானாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒன்றிய அரசு தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போதுதான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இச்சூழ்நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகரித்து. இதனை ஈடுசெய்ய இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் பெட்ரோல் டீசல் விலையை கிடுகிடுவென உயர்த்தியது. ஒன்றிய பா.ஜ.க அரசும் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது.
இதனிடையே தற்போது கடந்த 3 மாதங்களுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையை விட குறைந்துள்ளது. ஆனால் ஒன்றிய மோடி அரசு மட்டும் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முன்னதாக பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!