இந்தியா

“இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விடாமல் பாதுகாக்கும் சக்திகள் யார்?” : அமைச்சர் PTR கேள்வி!

வாடி, வதங்கி கிடக்கும் மக்களை கைதூக்கி விடவேண்டியது ஒன்றிய அரசு, மக்கள் மீது மென்மேலும் சுமையை திணித்து, எழுந்திருக்க முடியாத அளவுக்கு வதைப்பது ஏற்க முடியாத செயல்!

“இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விடாமல் பாதுகாக்கும் சக்திகள் யார்?” : அமைச்சர் PTR கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ரஷ்யா-உக்ரைன் போர் பிரச்னையை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முக்கியமாக, ஐந்து மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலை அன்றாடம் உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்கள் தலையில்தான் விழுகிறது.

“இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விடாமல் பாதுகாக்கும் சக்திகள் யார்?” : அமைச்சர் PTR கேள்வி!

ஒன்றிய அரசின் இதுபோன்ற அதிரடி முடிவு காரணமாக, வாகன போக்குவரத்து கட்டணமும் உயர்கிறது. எல்லா துறையிலும் மறைமுக விலைவாசி உயர்வு தானாக அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒன்றிய அரசு தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.

ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போதுதான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இச்சூழ்நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது. பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories