India
“முடி கொட்டுவதற்கு நிரந்தர தீர்வு..”: விளம்பரத்தை பார்த்து சிகிச்சை செய்த இளைஞரின் உறுப்புசெயலிழந்து பலி!
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவர்க்கும் உண்டான பொது பிரச்னை என்றால் அது முடி கொட்டுவது தான். பெண்கள் இதற்காக பல கைவைத்தியங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்காக விளம்பரங்களும் அதிகமாக காணப்படுகிறது.
முன்பெல்லாம், இதற்காக தலை எண்ணெய் மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்போது இதற்காக அறுவை சிகிச்சை முறையும் வந்துள்ளது. மேலும் இதற்காக விளம்பரங்களும் ஒளிபரப்பாகிறது. இதனை நம்பி சிலர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (வயது 30) என்ற இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு முடி உதிர்வு பிரச்னை அதிகமாக காணப்பட்டுள்ளது. எனவே அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் சில நாட்களில் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவருக்கு செப்சிஸ் எனப்படும் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த காயங்கள் ஆறாமல் அழுகி அதிலுள்ள பாக்டீரியாக்கள் மூலம் நச்சுத்தன்மை உருவாகி அது ரத்தத்தில் கலந்துள்ளது. இதில் அவரது சிறுநீரகம் செயலிழந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக இவரது மற்ற உடல் உறுப்புகளும் செயலிழக்க தொடங்கி மருத்துவமனையில் சீரியஸான நிலைமையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மீது புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் உயிரிழந்த ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முடி கொட்டுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞருக்கு தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!