India
கதவின் இடையே சிக்கிய தலை.. திருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்.. - உ.பி-யில் பரபரப்பு !
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை அடுத்துள்ளது தனியல்பூர். இங்கு நசீம் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி ஆலை ஒன்று உள்ளது. இங்கு கடந்த இரண்டு நாட்களாக வேலை இல்லாத காரணத்தினால் தொழிலார்களுக்கு விடுப்பு விட்டு, ஆலை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனை அறிந்த ஜாவீத் என்ற 30 வயது திருடன் ஒருவர், அந்த ஆலைக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த கதவை திறக்க முயன்றுள்ளார். அப்போது, அவர் விசைத்தறி ஆலையின் வாசல் கதவை பாதி திறந்து உள்ளே நுழைய முயன்றபோது, முதலில் அவரது தலையை உள்ளே நுழைந்துள்ளார்.
ஆனால் அந்த ஆலையின் கதவின் மேல் பூட்டு இருப்பதை அறியாத அவர், தனது தலையை உள்ளே நுழைந்ததால், அது சிக்கி கொண்டது. இதில் அவர் தலை மட்டும் ஆலை உள்ளே இருக்க, அவரது முழு உடலும் வெளியே இருந்துள்ளது.
தான் சிக்கிக்கொண்டதை அறிந்த திருடன் உடனடியாக தனது தலையை வெளியே எடுக்க கடுமையாக முயன்றார். ஆனால் வெளியே இழுக்க முடியவில்லை. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு கதவின் இடையே சிக்கிய இவரை, இன்று காலை அந்த பகுதி வாசிகள் கண்டனர். பின்னர் அவர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
மேலும் அவரை குறித்து தகவல்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட சென்ற இடத்தில் கதவின் இடையே தலை சிக்கி மூச்சு திணறி திருடன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!