India

வெளிநாட்டில் இருந்து சாக்லேட் வாங்கி வந்த தந்தை.. ஆசையாய் சாப்பிட்ட சிறுவன் பரிதாப பலி: சோகத்தில் கிராமம்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கங்கன் சிங் - கீதா தம்பதி. தற்போது தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்திருக்கும் கங்கன் சிங், தனது பணி காரணமாக அவ்வப்போது வெளியூருக்கு சென்று வருவார்.

அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது பணி சம்மந்தமாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், தனது குழந்தைகளுக்கு ஆசையாக வெளிநாட்டில் இருந்து சாக்லேட்கள் வாங்கி வந்துள்ளார். இதனை தனது பிள்ளைகளுக்கு பள்ளி செல்லும்போது கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இவரது 8 வயது மகன் சந்தீப் என்பவர், அந்த பகுதி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் தனது தந்தை கொடுத்த சாக்லேட்டை கொண்டு சென்றுள்ளார். அப்போது வகுப்பில் வைத்து அந்த சாக்லேட்டை சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது சிக்கி கொண்டது.

இதை மூச்சு திணறிய சிறுவன், வகுப்பறையிலேயே மயக்கமடைந்து விழுந்தார். இதனை கண்ட சக ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிறுவனுக்கு அளித்த சிகிச்சை பலனின்றி, சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரை பார்த்து கதறி அழுதனர். இது காண்போருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் இருந்து தந்தை வாங்கி வந்த சாக்லேட்டை ஆசையாய் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கதவின் இடையே சிக்கிய தலை.. திருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்.. - உ.பி-யில் பரபரப்பு !