India
டெல்லியை தொடர்ந்து உ.பியில் அரங்கேறிய கொடூரம்.. காதலியை 6 துண்டுகளாக வெட்டிய இளைஞ ர்..
தன்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன், தனது காதலியை 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் இஷாக் பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆராதனா. இவரும் அசம்கர் என்ற பகுதியை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவே அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆராதனாவிற்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த காதலன், தன்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்ட தனது காதலி மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இதனால் தனது நண்பர்கள், மற்றும் பெற்றோர் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆராதனாவை தனியே சந்திக்க வேண்டுமென்று அழைத்துள்ளார். எனவே அவரும் தனது முன்னாள் காதலனை சந்திக்க ஒரு கரும்பு தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காதலன் பிரின்ஸ் யாதவ், தனது முன்னாள் காதலியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர் சடலத்தை மறைக்க, ஆராதனாவின் உடலை 6 துண்டுகளாகா வெட்டி ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அருகிலிருந்த கிணற்றில் வீசியுள்ளார். இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அது ஆராதனா என்று தெரியவந்தது. இதையடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் அவரது முன்னாள் காதலன் பிரின்ஸ் யாதவ் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அதோடு பிரின்ஸ் அழைத்துச்செல்லப்படும்போது காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயன்றதால், அவரை காவல்துறை அதிகாரிகள் காலில் சுட்டு பிடித்தனர். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு துணையாக இருந்த சுமன், பிரமிளா யாதவ், மஞ்சு, ஷீலா, கலாவதி, ராஜாராம் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களையும் தீவிரமாக அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் லிவ் - இன் உறவில் இருந்த காதலன் அப்தாப் என்பவர், தனது காதலி ஷ்ரதாவை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி மத்திய பிரதேசத்தில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை 2 துண்டுகளாக கணவரே வெட்டியெறிந்துள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!