India
குழாயில் நீர் அருந்திய பட்டியலின பெண்.. தொட்டியை கோமியத்தால் சுத்தம் செய்த கிராமம்.. கர்நாடகாவில் கொடுமை!
பட்டியலின பெண் ஒருவர் குழாயில் தண்ணீர் குடித்ததால், அந்த தண்ணீர் தொட்டியை பசுவின் கோமியத்தை கொண்டு சுத்தம் செய்த கிராம மக்களின் செயல் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ளது ஹெக்கோதாரா என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள லிங்காயத்கள் தெருவில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக பட்டியலின் சமுதாயத்தை சேர்ந்த பலரும் விருந்தினராக பணிபுரிந்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவருக்கு திடீரென்று தாகம் எடுத்ததால் அருகிலிருந்த குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். இந்த பெண் தண்ணீர் குடிப்பதை கண்ட மாற்று சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், உடனே அவரை வசிப்படியுள்ளனர். மேலும் குழாயை திறந்துவிட்டு, அந்த தண்ணீர் டேங்கில் இருந்த தண்ணீரையும் முழுவதுமாக வெளியேற்றினர்.
பின்னர், அதனை மாட்டு கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். பட்டியலின பெண் குடித்தார் என்பதற்காக தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, அதில் கோமியம் தெளித்துள்ள கிராம மக்களின் செயல் குறித்த வீடியோவும் அண்மையில் வெளியானது.
இது வெளியாகி வைரலான நிலையில், கிராம மக்களின் செயலுக்காக பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நேற்றைய தினம், இந்த கிராமத்திற்கு வருவாய்த்துறையினர், சமூக நலத்துறை அதிகாரிகள் சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த சம்பவம் குறித்த தகவல்கள் உண்மை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது போன்று இனி யாரையும் செய்யக்கூடாது எனவும் அந்த கிராம வாசிகளுக்கு காவல்துறை அறிவுறித்தியுள்ளனர்.
மேலும் இத சம்பவத்தின் எதிரொலி காரணமாக இந்த ஒரு தண்ணீர் தொட்டியில் மட்டுமின்றி, அந்த கிராமத்தில் மற்ற தண்ணீர் தொட்டியின் மீதும் 'அனைத்து மக்களும் இதை தண்ணீரை உபயோகப்படுத்தலாம்' என எழுதி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!