India
"ப்ளீச்சிங் பவுடரில் ஊறவைக்கப்பட்ட உடல் பாகங்கள்.. தலை மட்டும் தனி பேக்கிங்"-டெல்லி காதலி கொலையில் திடுக்
திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய காதலியை காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியெறிந்துள்ள சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல கால் சென்டரில் வேலை பார்த்தவர் ஷர்தா என்ற இளம்பெண். இவர் ஒரு ஃபுட் Bloggerம் கூட. இந்த நிலையில் இவருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்ற நபருக்கும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
பின்னர் இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஷ்ரதா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து அமீனை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலர்கள் டெல்லி வந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அமீனிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதே போல் கடந்த மே மாதமும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த அமீன் காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு போலிஸாரிம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்வது என்று யோசிக்கையில் ஹாலிவுட் கிரைம் படம் பார்த்து அதன்படி தனது காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இதற்காக அவர் புதிய கத்தி, Fridge உள்ளிட்டவையும் வாங்கியுள்ளார். பின்னர் காதலியின் வெட்டப்பட்ட உடலை அதனுள் வைத்துள்ளார். ஆனால் அந்த உடல் பாகங்கள் விரைவில் சுருங்கினால் தான் வெளியே கொண்டு செல்ல முடியும் என்று, இதற்காக கொதிக்கும் தண்ணீரில் ப்ளீச்சிங் பெளடரை போட்டு, அதில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை வைத்து ஊறவைத்துள்ளார்.
பின்னர் அதனை தனித்தனியே பேக்கிங் செய்து அந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மேலும் துர்நாற்றம் வராமல் இருக்க வாசனை திரவியம், ஊதுபத்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளார். காதலி இறந்த மறுநாளே, அதே டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான வேறொரு பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
இதையடுத்து வெட்டப்பட்ட உடல் பாகங்களை 18 நாட்களாக காட்டு பகுதி, மலைப்பகுதி உள்ளிட்டவைகளில் அப்புறப்படுத்தியுள்ளார். அந்த உடல் பாகங்களை ஊறவைக்க சுமார் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை அமீன் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!