India
கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி மரணங்கள்: தந்தை கண்முன்னே சுருண்டு விழுந்து உயிரிழந்த 2ம் வகுப்பு மாணவன்!
கர்நாடகா மாநிலம், கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் மோக்ஷித். இவர் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுவன் மோஷித்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் வகுப்பறையில் சோர்வாக இருந்துள்ளார். இதைப்பார்த்த வகுப்பு ஆசிரியர் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், தந்தை சந்திரசேகர் உடனே பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் மோக்ஷித் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரகேசர் மகனை உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைகேட்டு தந்தை சந்திரசேகர் கதறி அழுதது மருத்துவமனையில் இருந்தவர்களின் நெஞ்சை கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2 மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது 2ம் வகுப்பு மாணவனும் உயிரிழந்துள்ளதால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 மாணவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!