India
நாய்க்கு உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. உறவினரை அடித்து கொலை செய்த இளைஞர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் முளையன்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். அவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். மேலும் ஹர்ஷத் என்ற உறவினர் இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷத், நாய்க்கு உணவு வழங்காமல் இருந்துள்ளார். இது அறிந்த ஹிக்கீம் தனது உறவினர் என்றும் பாராமல் அவரை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஹர்ஷத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி ஹர்ஷத் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த ஹர்ஷத் உடலில் பலத்த காயம் இருந்ததாக உடல்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஹக்கீமை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஹர்ஷத் விலா எலும்பு முறிந்து இரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களும் போலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?