India
20 மீட்டர் இழுத்துச் சென்ற கண்டெய்னர் லாரி.. பள்ளிக்கு சென்ற தந்தை - மகளுக்கு நேர்ந்த துயரம்!
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார். அவரது மகள் கவுரி. இவர் சாத்தனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மகள் கவுரியை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தந்தை கோபகுமார் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் மயிலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி 20மீட்டர் வாகனத்தை இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதறி தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், தந்தை மகள் வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதி இழுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கவுரவ் குமாரைக் கைது செய்துள்ளனர். சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!